Data types - Day 2

Fathima Shaila - Jul 12 - - Dev Community

Data types

பைத்தானில் 4 வகைத் தரவுகள் உள்ளன. அவையாவன:

  • Numeric data type
  • String data type
  • Boolean data type
  • None data type

Numeric data type

Numeric data type எண்களைக் குறிக்கும். இவற்றை மூன்று வகைப்படுத்தலாம்.

  • Integer - இவை முழு எண்கள் 2, 50, 638, 9743

  • float / decimal- இவை தசம எண்கள், பின்னங்களும் தசமங்களாக மாற்றப்படுவதால் இவற்றில் உள்ளடங்கும். 3.14, 738.244, 13.8

  • Complex Number- சிக்கலெண்கள் அதாவது மெய்யெண்ணும் கற்பனை எண்ணும் சேர்ந்த கூட்டெண்.
    3+3j, 24-2x

Data types ஐ கண்டறிவதற்கு type()ஐ பயன்படுத்தலாம்

type(4.5)

float


type("hello")

str


String

String இரட்டை அல்லது ஒற்றை மேற்கோள் குறிகளுக்குள் (quotation marks) எழுதப்படும் இவற்றில் letters, characters, space, etc… உள்ளடங்கும்.

Type casting

type casting இல் integerஐ string ஆகவும் stringஐ integer ஆகவும் மாற்றலாம்.

int("123")

123


str(231)

"231"


Boolean

True அல்லது False ஆகிய இரு முடிவை மட்டும் தரக்கூடியவை.

Variables

Variable- object, value, data என்பவற்றை குறிக்கின்றது.

Variablesகளை எழுதும் போது
Underscope, characters உடன் ஆரம்பிக்க வேண்டும். குறியீடுகள், எண்களால் ஆரம்பிக்க கூடாது. இறுதியில் எண்களை இடலாம்.

first_name ✅
first1 ✅
_first✅
_firstName✅

First name❌
&first ❌
1first ❌
my-variable❌
str❌

Single Assignment

Text="Hello World"

Multiple Assignment

name, age = hiba, 2

Constants

மாறாத பெறுமதியை கொண்ட variables ஐ constant என்போம். ஆங்கில பேரெழுத்துக்களால் இவை எழுதப்படும்.

PI = 3.14159
MAX_USERS = 100

. . . . . . . . . .
Terabox Video Player